எரிபொருள் வழங்காவிட்டாலும் வீதியில் பயணிக்கும் பெருமளவான வாகனங்கள்!

0
264

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த பத்து நாட்களாக தனது எரிபொருள் விநியோக நிலையங்களுக்கு எரிபொருளை வழங்காவிட்டாலும் பெருமளவான வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வாகனங்கள் பாதையில் பயணிப்பதன் மூலம் பெருமளவிலான மக்கள் எரிபொருளை சேமித்து வைத்திருப்பதை இது காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களை பாதாள கோஷ்டியினரே கட்டுப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்படும் எரிபொருளை எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கும் பொறுப்பு அந்தந்த எரிபொருள் நிலையங்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் வழங்கவிட்டாலும் வீதியில் பயணிக்கும் பாரிய வாகனங்கள்! | Massive Vehicles Traveling Road Even Fuel Provided