ரஷ்ய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியதாக ஜனாதிபதி கூறுவது முற்றிலும் தவறானது – உதயங்க வீரதுங்க

0
92

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும், ராஜபக்சர்களுக்கு மிகவும் நெருங்கிய உறவினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

உதங்க வெளியிட்ட தகவல்

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ரஷ்ய தூதுவர் பதவியை பணத்திற்கு விற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இன்று ஜனாதிபதி மட்டுமன்றி செயலாளர்களும் தோல்வியடைந்துள்ளனர்.

ரஷ்ய விமானங்கள் தடுத்து நிறுத்தம்

வாரத்திற்கு 12 லட்சம் டொலர்கள் பெற்ற ரஷ்ய விமானங்களை அமெரிக்க ஜனாதிபதி தடுத்து நிறுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எண்ணெய் கொண்டு வர ரஷ்யா சென்ற அமைச்சர் சுசில் பிரேமஜயந்த எப்படியும் எண்ணெயை மாற்றிவிட்டு தான் வருவார் என அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ள எரிபொருள் இறக்குமதியை தம்மிடம் ஒப்படைத்தால் அதைச் செய்யத் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.