இலங்கையை விட்டு வெளியேற தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

0
274

இலங்கை விட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வெளியேற தயாராகி வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தமது பயணத்துக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இராஜதந்திர கடவுச்சீட்டுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து இந்த நிலை எழுந்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை இராஜதந்திர கடவுச்சீட்டை தயார் செய்யாத பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கான புதிய விண்ணப்பங்களை செய்து வருவதுடன் கடவுச்சீட்டு காலாவதியானவர்களும் அவற்றை புதுப்பித்து வருகின்றனர்.

இலங்கையை விட்டு வெளியேற தயாராகிவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! | Members Of Parliament Preparing To Leave Sri Lanka

இராஜதந்திர கடவுச்சீட்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மற்றும் நாடாளுமன்றத்தால் எளிதாக ஏற்பாடு செய்யப்படலாம்.

இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருப்பவர் விமான நிலையங்களுக்கு இடையே எளிதாகப் பயணம் செய்து சில நாடுகளில் விசாவைப் பெறலாம்.

இலங்கையை விட்டு வெளியேற தயாராகிவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! | Members Of Parliament Preparing To Leave Sri Lanka