புடினின் ரகசிய காதலி உட்பட 16 ரஷ்யர்களுக்கு ஆஸ்திரேலியா தடை!

0
250

புடினுடைய (Putin) காதலியைக் குறிவைத்து பல நாடுகள் தடைகள் விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

புடினுடைய (Putin) இரகசிய காதலி என்று அழைக்கப்படுபவர் அலினா கபேவா (Alina Kabaeva). ஏற்கனவே புடினுடன் (Putin) அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது அவர் புடினுடைய(Putin) மூன்றாவது குழந்தையை சுமப்பதாகக் கூறப்படுகிறது.

புடினின் இரகசிய காதலிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! | Putin S Secret Girlfriend Has A Problem
Alina Kabaeva

முன்பு அலினா கபேவா (Alina Kabaeva) மீது தடைகள் விதித்தால் தேவையில்லாமல் புடினுடைய (Putin) கோபத்துக்கு ஆளாகக் கூடும் என அமெரிக்கா முதலான நாடுகளே தயங்கி நின்ற நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய ஊடுருவல் உலகம் முழுவதும் பல்வேறு வகையில் தாக்கத்தை ஏற்படுத்த இப்போது பல நாடுகள் புடினுக்கு(Putin) நெருக்கமானவர்கள் மீது தடைகள் விதிக்கத் துவங்கிவிட்டன.

Alina Kabaeva with Putin

ஒலிம்பிக் தடகள வீரங்கனையான அலினா கபேவா (Alina Kabaeva) மீது மட்டுமின்றி புடினுடைய (Putin) முன்னாள் மனைவியான லியுட்மிலா ஓச்செரெட்னயா (Lyudmila Ocheretnaya) மீதும் மே மாதத்தில் பிரித்தானியா தடைகள் விதித்தது.

Lyudmila Aleksandrovna Ocheretnaya

அதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் அலினா கபேவா (Alina Kabaeva) முதலான 1,158 பேர் மீதும், 98 நிறுவனங்கள் மீதும் தடைகள் விதித்தது.

இதன்போது நேற்று அலினா கபேவா(Alina Kabaeva) முதலான 16 ரஷ்யர்கள் மீது அவுஸ்திரேலியாவும் தடைகள் விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.