கோட்டாபய அரசாங்கத்திற்கு கால அவகாசம்!

0
396

இலங்கையில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளூக்கு தீர்வு காண ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அரசாங்கத்திற்கு விசேடமாக நாங்கள் 7 நாட்களை வழங்குகிறோம் என துறவி அமைப்புகளின் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோட்டாபய அரசாங்கத்திற்கு காலக்கேடு! | Gotabaya Govt Waste Of Time Ascetic System Union

இந்த 7 நாட்களுக்குள் எந்த தீர்வும் பெற முடியாது போனால் கோட்டாபய ராஜபக்ஷ கூட்டத்தினரை வீட்டிற்கு அனுப்புவோம்.

நாங்கள் தான் நன்றாக ஆட்சி செய்தோம் என்று கூறுகிறார்கள். ஆனால் என்ன செய்தார்கள். நாளுக்கு நாள் மக்களின் வாழ்க்கை சீரழிக்கின்றனர்.

கோட்டாபய அரசாங்கத்திற்கு காலக்கேடு! | Gotabaya Govt Waste Of Time Ascetic System Union

அதேபோல ஒரு துறையிற்கு எத்தனை தடவை அமைச்சர்களை மாற்றினார். நாட்டில் மக்களை ஏமாற்றி மக்களின் வாழ்க்கை தரத்தை குழிக்குள் தள்ளியுள்ளனர். 

மேலும், விவசாயிகளின் வயிற்றில் அடித்தனர். உரமின்றி தவிர்க்கின்றர். எவ்வளவு கூறியும் ஜனாதிபதி கோட்டாபய எந்த பேச்சையும் கேட்கவில்லை. இதேவேளை, ராஜபக்ஷ குடும்பத்தினர் கொள்ளையடித்தனர், அவர்களை பற்றி மட்டுமே சிந்தித்தனர்.

ஆனால் நாட்டில் மக்களை பற்றி கவலைப்படவில்லை. எனவே உடனடியாக ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய இந் நாட்டிற்கு தீர்வு தாருங்கள். இல்லை எனில் எங்களுடைய தீர்வும் கடுமையாக இருக்கும்.- என்றார்.

கோட்டாபய அரசாங்கத்திற்கு காலக்கேடு! | Gotabaya Govt Waste Of Time Ascetic System Union