விறகை சேகரிக்கும்படி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய போலந்து அரசு

0
670

போலந்தில் எரிவாயு விலை அதிகரித்துள்ளதால் குளிரை சமாளிப்பதற்கு காடுகளில் இருந்து விறகை சேகரிக்கும்படி நாட்டு மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, உயர்ந்து வரும் எரிபொருள் விலை மற்றும் நிலக்கரி தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைப்பதற்கு மக்கள் விறகை சேகரிக்கும் முயற்சியை இலகுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது.

விறகை சேகரிக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய அரசாங்கம்! | Poland Govt Advised The People To Collect Firewood

போலந்தில் இன்னும் சில மாதங்களில் குளிர்காலம் ஆரம்பிக்கவுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் எரிசக்தி விலை அதிகரித்துள்ளது.

அதேபோன்று நிலக்கரியின் விலையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மும்மடங்காகியுள்ளது.

விறகை சேகரிக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய அரசாங்கம்! | Poland Govt Advised The People To Collect Firewood

இந்த நிலையில் போலந்து நிலப்பரப்பில் காடுகளின் அளவு சுமார் 30 வீதமாகும். அவற்றின் மரங்களை விறகாய்ப் பயன்படுத்த முடியும். இவ்வாண்டு இதுவரை 377,000 கன மீற்றர் விறகுகள் விற்கப்பட்டுள்ளன என தேரிவிக்கப்படுகின்றன்.

கடந்த ஆண்டு அதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் அது 30 வீதம் அதிகமாகும் எனவும் தேரிவிக்கப்படுகின்றது.

விறகை சேகரிக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய அரசாங்கம்! | Poland Govt Advised The People To Collect Firewood