சிங்கப்பூரில் மதுப்பிரியர்களிடம் வரவேற்பை பெற்ற கழிவு நீர் பீர்!

0
211

சிங்கப்பூரில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் தயாரிக்கப்பட்ட ‘பீர்’ மதுபான பிரியர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நீண்ட காலமாக குடிநீர் பற்றாக்குறை உள்ளது.

இதனால் அண்டை நாடான மலேசியாவில் இருந்து குடிநீர் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் கழிவு நீரை புற ஊதா கதிரியக்கத்தில் சுத்திகரித்து ‘நியூவாட்டர்’ என்ற பெயரில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இது தவிர உப்பு நீரும் குடிநீராக மாற்றப்படுகிறது. இந்நிலையில் சிங்கப்பூரைச் சேர்ந்த புருவெர்க்ஸ் நிறுவனம் நியூவாட்டரை பயன்படுத்தி பீர் தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பீருக்கு சிங்கப்பூரில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக புருவெர்க்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மதுப்பிரியர்களிடம் அமோகவரவேற்பை பெற்ற கழிவு நீர் பீர்! | Wastewater Beer Is A Hit With Drinkers

இது குறித்து புருவெர்க்ஸ் நிறுவன தலைவர் மிட்ச் கிரிபோவ் கூறுகையில் ”நியூவாட்டரில் பீர் தயாரித்து பார்த்ததில் அது வழக்கமான சுவையுடன் இருந்தது. நீரில் உள்ள தாதுப் பொருட்கள் பீர் தயாரிப்புக்கான ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்களிக்கின்றதாக குறிப்பிட்டார்