3.2 மில்லியன் குடும்பங்களுக்கு கொடுப்பனவை வழங்க திட்டமிட்டுள்ள அரசாங்கம்

0
604

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 3.2 மில்லியன் குடும்பங்களுக்கு ஜூலை முதலாம் திகதி முதல் ஆறு மாத காலத்துக்கு அதிகபட்சமாக ரூ.7,500 கொடுப்பனவை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் நாட்டில் நிலவும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை இந்தத் திட்டத்திற்காக தலா 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளன. நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி திட்டத்தின் கீழ் உதவி பெறும் குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

சமுர்த்தி பெறுவோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவும் ரூ.7,500 ஆக அதிகரிக்கப்படும் என்றும், நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் 3.2 மில்லியன் குடும்பங்களுக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதம்! | A Boon For32 Million Families Sri Lanka Crisis

அதேசமயம், விவசாயிகளுக்கு உரம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த சில வாரங்களாக அரசாங்கம் உரத்தைக் கொள்வனவு செய்து வருகிறது என்றார்.

வெளிநாடுகளால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் விளைவாக எரிபொருள் இறக்குமதி தொடர்பான பிரச்சினைகள் எழுந்ததாக தெரிவித்த அமைச்சர், இந்தியாவிலிருந்து பெறப்பட்ட 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் உடனடியாக விநியோகிக்கப்படும் என்றும் கூறினார்.

இலங்கையில் 3.2 மில்லியன் குடும்பங்களுக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதம்! | A Boon For32 Million Families Sri Lanka Crisis

மேலும் பெரும் போகத்தை இலக்காகக் கொண்டே உரங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், இறக்குமதி செய்யப்படும் உரங்கள் நெல், சோளம் மற்றும் தேயிலை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.