காலி மைதானத்தில் போராட்டக்காரர்களை கண்டு அதிர்ந்த ராணுவம்!

0
274

இன்றைய தினம் காலி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி இடம்பெற்றது.

இந்த போட்டியை பார்வையிட்ட கலந்துகொண்ட மக்கள் போட்டிக்கு நடுவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் சிறிது நேரம் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவர்களிடம் இந்த போட்டியை சர்வதேச அளவில் பலர் பார்க்கின்றனர். அதனால் இதுபோன்று செய்யவேண்டாம் என்றும் இதனால் எமது நாட்டை மற்றவர்கள் தவறாக நினைத்து விடுவார்கள் என்றும் கேட்டுகொண்டனர்.

இதனையும் மீறி கோட்டா கோ ஹோம் என்ற கோஷத்தை எழுப்பினர். இதனால் மக்களை அங்கிருந்து அகற்ற படையினர் முற்பட்டவேளை நாட்டை பற்றி இனியும் தவறாக நினைக்க எதுவுமில்லை. இதுவரை நடத்ததைவிட இது ஒன்றும் பெரிய விடயமல்ல என்றும் நாட்டு மக்களின் போராட்டங்களில் சிவில் அமைப்பினர் தலையிடவேண்டாம் என பதிலளித்தனர்.