பிரான்சிலுள்ள இலங்கைத் தமிழ்ப் பெண் விடுத்த வேண்டுகோள்

0
708

பிரான்ஸில் குடியேறியுள்ள இலங்கை உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் மொழிப் பிரச்சினையால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் லுஆரே (Loiret) நகரில் வசிக்கும் வெளிநாட்டுக் குடும்பங்களுக்குள் பிரெஞ்சு மொழி கற்பிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். இதில் இலங்கை தமிழ் பெண் ஒருவர் ஈடுபட்டுள்ளதுடன் ஏனையவர்களை கற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

AIEPG என்ற பெயரில் இந்த வகுப்பறைகள் இயங்குகின்றன. அங்கு பலருக்கு சில சமயங்களில் பிரெஞ்சு மொழியின் அறிவு குறைவாகவோ அல்லது மோசமாகவோ இருக்கும். அவர்களுக்கு உதவும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. வெளிநாடுகளில் இருந்து பிரான்ஸில் குடியேறும் மக்களிடையே பிரெஞ்சு மொழி அறிவு மிகவும் குறைவாகவே உள்ளது.

மேலும் சிலருக்கு முழுமையாகவே பிரெஞ்சு மொழி அறிவு இல்லை எனவும் தெரியவந்துள்ளது. இதனை கருத்திற் கொண்டு இயங்கும் தன்னார்வ அமைப்பில் பல வெளிநாட்டவர்கள் பிரெஞ்சு மொழியை கற்று வருகின்றனர்.

அதற்கமைய அங்கு குடியேறியுள்ள ராஜேஷ்வரி என்ற இலங்கை பெண் மிகவும் ஆர்வத்துடன் கற்பதாக தெரிவித்துள்ளார். தன்னை போன்று பிரெஞ்சு மொழி அறிவு குறைவாக உள்ளவர்களை இலகுவாக பிரெஞ்சு மொழி கற்பதற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அதோடு தான் தற்போது ஹோட்டல் துறையில் பணியாற்ற கூடிய வகையில் பிரெஞ்சு மொழி கற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து பிரான்ஸிற்கு வந்து மொழி அறிவின்றி இருப்பவர்களுக்கு இந்த நடைமுறை பெரிய அளவில் உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தன்னால் சரளமாக பிரெஞ்சு மொழி பேச முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ராஜேஷ்வரி தெரிவித்துள்ளார்