பதுக்கப்பட்டிருந்த 9 இலட்சம் ரூபா பெறுமதியான எரிபொருள் மீட்பு!

0
306

காலி- கிராந்துரு கோட்டேயிலுள்ள வீடொன்றில் இருந்து சுமார் ஒன்பது லட்ச ரூபா பெருமதியான எரிபொருள் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

விசேட அதிரடி படையினரின் அரந்தலாவ முகாமுக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ஆயிரத்து 900 லீற்றர் டீசல், 19 லீற்றர் பெட்ரோல் ஆகியன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன் அவற்றை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கிராந்துருகோட்டே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.