கிளிநொச்சி வைத்தியசாலையில் யாழ் மாணவி தற்கொலை முயற்சி!

0
116

யாழிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், கிளிநொச்சியில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ள சம்பவம் அங்கு பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த மாணவியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

யாழ்ப்பாணம், புறநகர் பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவி, மூன்று பேரால் வாகனத்தில் கடத்தப்பட்டதாக உறவினர்கள் முறைப்பாடு செய்தனர். அவரது கடத்தல் தொடர்பில் யாழ்ப்பாணம் முழவை பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் யாழ் மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு! | Kilinochchi Jaffna Girl Student Suicide Attempted

இந்த நிலையில் குறித்த மாணவி இன்றைய தினம் (29-06-2022) கிளிநொச்சி வைத்தியசாலை முதலாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இருப்பினும், அவர் மீட்கப்பட்டு அதே வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.