இலங்கையர்களை திருமணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கான வதிவிட விசா 5 வருடங்களாக அதிகரிப்பு

0
217

இலங்கையரை திருமணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் வதிவிட விசா 5 வருட காலத்துக்குரியதாக அதிகரிக்கப்படும் என அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஒரு வருட காலத்துக்கு இத்தகைய விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது 5 வருட காலத்துக்குரியதாக அதிகரிக்கப்படும் எனவும் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி திங்கட்கிழமை வரை அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தம்மிக பெரேரா கூறினார்.

இதேவேளை கடவுச்சீட்டு பெறுவதற்கான ஒருநாள் சேவைகள் கண்டி, மாத்தறை, வவுனியாவிலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.