பதவி விலகும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல்வர்

0
269

பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல்வர் ஜோன் ஹோர்கன் (John Horgan) தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாகவே தாம் பதவியை துறக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

ஹோர்கன் (John Horgan) இரண்டு தடவைகள் முதல்வர் பதவியை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக தொண்டையில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனால் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது உடல் நலம் ஆரோக்கியமாக காணப்பட்டாலும் வலுவிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

புற்று நோயிலிருந்து குணமடைந்த போதிலும் முதல் பதவியின் தவணைக் காலம் பூர்த்தியாகும் வரையில் போட்டியிடும் திட்டமில்லை என ஹோர்கன் (John Horgan)  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 17 ஆண்டுகளாக ஹோர்கன்(John Horgan) அரசியலில் வழங்கி வந்த சேவைக்காக நன்றி பாராட்டுவதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ (Justin Trudeau)  தெரிவித்துள்ளார்.