இறுதிவரை உக்ரைனுடன் இருப்போம்! உறுதிமொழி வழங்கிய G7 தலைவர்கள்

0
213

ஜேர்மனியில் நேற்றைய தினம் (28) நடைபெற்ற உலக பணக்கார நாடுகளின் கூட்டமர்வான G7 அமர்வில் அழைக்கப்பட்ட விசேட விருந்தினராக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) காணொளி மூலம் தமது உரையை நிகழ்த்தினார்.

இதன் போது ஜெலன்ஸ்கி உக்ரைன் நட்டின் தற்போதைய நிலையை மிவும் உருக்கமான முறையில் எடுத்துக் கூறியதுடன் தற்போதைய தேவைகளையும் பட்டியல் படுத்தினார்.

உக்ரைனுடன் இறுதி வரை இருக்குமாறும் எம்மை கைவிட வேண்டாம் எனவும் ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டார்.

நாங்கள் இறுதி வரை உக்ரைன் கூடவே இருப்போம்! உறுதிமொழி வழங்கிய தலைவர்கள் | We Will Be With Ukraine Until The End G7 Leaders

இதற்கு பதிலளித்த G7 நாட்டுத் தலைவர்கள், “நாங்கள் இறுதி வரை உக்ரைன் கூடவே இருப்போம். விட்டுச் செல்ல மாட்டோம்”. என அதிபர் ஜெலன்ஸ்கிக்கு உறுதிமொழி வழங்கியிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.