அமெரிக்க ஜனாதிபதி உட்பட 25 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய ரஷ்யா தடை

0
227

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின்(Joe Biden) மனைவி மகள் உட்பட மேலும் 25 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ரஷ்யாவின் அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு அமெரிக்கா விதித்த தடைகளுக்கு பதிலடியாக இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

அதன்படி ஜோ பைடனின்(Joe Biden) மனைவி ஜில் பைடன்(Jill Biden), மகள் ஆஷ்லி பைடன்(Ashley Biden), அமெரிக்காவின் நியூ யோர்க் மாநில செனட்டர் கேர்ஸ்டன் கிலிபிராண்ட்(Gerston Cliffrand), மேய்ன் மாநில செட்டனர் சுசான் கொலின்ஸ்(Maine state senator Susan Collins), கென்டக்கி செனட்டர் மிட்ச் மெக்கென்னல்(Kentucky Senator Mitch McKennell), ஐயோவா செனட்டர் சார்ள்ஸ் கிராஸ்லி(Iowa Senator Charles Crosley) உட்பட பல செனட்டர்களும் புதிதாக தடை விதிக்கப்பட்டேரின் பட்டியலில் அடங்கியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) உட்பட பலருக்கு கடந்த மே மாதம் ரஷ்யா தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.