தியவன்னா ஓயாவில் குதித்த திருடனை காப்பாற்றிய மக்கள்

0
224

தியவன்னா ஓயாவில் குதித்த நபர் ஒருவரை சம்பவ இடத்தில் இருந்த இருவர் காப்பாற்றியுள்ளனர்.

பத்தரமுல்லை ஜப்பான் இலங்கை நட்புறவு வீதிக்கு அருகில் துவிச்சக்கரவண்டியை திருடியதாக கூறப்பட்ட நபர் ஒருவரே இவ்வாறு குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடைபாதையில் ஓடியவர் திடீரென தியவன்னா ஓயாவில் குதித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்தில் இருந்த இருவர் அவரை காப்பாற்றியுள்ளனர். எனினும், குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல கத்தி கூச்சலிட்டதாக கூறப்படுகின்றது.

அவர் துவிச்சக்கர வண்டியொன்றை திருட முயற்சித்த நிலையில் அது தோல்வியடைந்தால் தியவன்னா ஓயாவில் குதித்துள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் சந்தேகநபர் சம்பவ இடத்தில் கடமையில் இருந்த பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.