நிதி அமைச்சராக மீண்டும் அலி சப்ரி; ரணிலை கழற்றிவிட முடிவு

0
244

பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி (Ali Sabri) நிதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.

நிதி அமைச்சு பெறுப்பு தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வசமே உள்ளது.

இருப்பினும், நிதி அமைச்சு பிரதமர் வசம் இருப்பதை மொட்டு கட்சி விரும்பவில்லை. மத்திய வங்கி ஆளுநருடனும் பிரதமருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே நிதி அமைச்சு பதவியை பிரதமரிடம் இருந்து கழற்றி அலி சப்ரிக்கு கையளிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) உத்தேசித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி, ஏற்கனவே நிதி அமைச்சு பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.