கனடாவில் குதிரைகளிடம் மிதிபட்டு உயிரிழந்த 30 வயது பெண்

0
69

கனடாவில் குதிரைகளிடம் மிதியுண்டதனால் 30 வயதான இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொனோகா ஸ்டேம்பேட் எனப்படும் களியாட்ட கண்காட்சி நிகழ்வில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குதிரை பந்தயத்திற்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

குதிரையின் மீது ஏறி பயிற்சியில் ஈடுபட்ட போது குதிரையிலிருந்து வீசுபட்ட பெண் கீழே வீழ்ந்துள்ளார்.

கீழே வீழ்ந்த பெண்ணை குதிரைகள் மிதித்துக் கொண்டு ஓடியதில் காயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.

தன்னார்வ அடிப்படையில் குறித்த பெண் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

கடுமையான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டாலும் இவ்வாறான விபத்துச் சம்பவங்கள் பதிவாகிவிடுவதாகவும் இந்த சம்பவம் பெரும் கவலையளிப்பதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.