ஜி-7 உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் விடுத்த வேண்டுகோள்

0
414

ஜேர்மனியில் உள்ள நகரமொன்றில் இந்த ஆண்டுக்கான G7 உச்சி மாநாடு இடம்பெற்று வருகின்றது.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளின் உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மாநாட்டில் பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தது. அதில் உக்ரைன்-ரஷியா போர் முக்கிய இடம் பிடித்தது. ஜி 7 நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தனர்.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஜி-7 மாநாட்டில் காணொளி வாயிலாக நேற்று (27-06-2022) கலந்துகொண்டார்.   

அப்போது ஜெலன்ஸ்கி பேசுகையில்,

குளிர் காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

ஜி7 மாநாட்டில் பேசிய உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி குலேபா கூறுகையில்,

ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும். உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் அளிக்க வேண்டும். ரஷியாவின் ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.