அனுர குமாரவுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – விமல்

0
190

மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமாரவுக்கு தாம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தம்மிடம் நாட்டை ஒப்படைத்தால் ஆறு மாதங்களில் நாடு மீண்டும் கட்டியெழுப்புவேன் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஒரே வழி அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதே என்றும் அனுர கூறியிருந்தார். சில தலைவர்கள் விமர்சனம் செய்தாலும், இந்த விவகாரத்தை தொட்டு கையை எரிக்க பயப்படுவதாகவும், இக்கட்டான காலங்களில் தலைமை தாங்குவதற்கு தலைவர்கள் தேவை என்றும் அவர் கூறினார்.

இவ்வாறான நிலையிலேயே அனுர குமாரவுக்கு தாம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.