மோடியின் பின்னால் இருந்து தோளை தட்டி அழைத்த பைடன்!

0
181

ஜேர்மனியில் இடம்பெறும் ஜி-7 நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் மோடி, (Narendra Modi) ஏழு நாடுகளின் தலைவர்கள் கொண்ட குழுவினர் உடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் அனைத்து தலைவர்களும் அப்போது ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

பிரதமர் மோடி தனது அருகில் நின்று கொண்டிருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவுடன் (Justin trudeau) பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஜோ பைடன், (Joe Biden) பிரதமர் மோடியை தேடி, அவர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சென்றார்.

மோடியின் பின்புறம் இருந்து தோளை தட்டி அழைத்த பைடன், தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பைடனை கண்டவுடன் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்ற பிரதமர் மோடி அவருடன் கைகுலுக்கி பதிலுக்கு வாழ்த்து கூறினார்.