ரஷ்யாவிற்கு எதிராக 300,000 வீரர்களை களமிறக்கிய நேட்டோ!

0
72

பனிப்போருக்குப் பின்பு முதன்முறையாக ரஷ்ய அச்சுறுத்தலுக்கு எதிராக நேட்டோ அமைப்பு பிரம்மாண்டமாய் 300,000 வீரர்களை களமிறக்குகிறது.

இது குறித்து பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ள நேட்டோ தலைமையகத்தில் பேசிய அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் Jens Stoltenberg, ரஷ்யா தங்கள் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என நேட்டோ கருதுவதாகவும், பனிப்போருக்குப் பின், இதுவரை இல்லாத அளவில் 300,000 வீரர்களைக் களமிறக்குவது இதுவே முதல் முறை என்றும் கூறினார்.

தற்போது அதிகபட்சமாக நேட்டோவின் பதிலடிப் படையில் 40,000 வீரர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதை 6 மடங்கு அதிகமாக்கி, 300,000 வீரர்களைக் களமிறக்க நேட்டோ தயாராகிவருகிறது.

ஆனால், இதற்கு புடின்(Putin) பதிலடி கொடுக்க நினைத்து ஏடாகூடமாக எதையாவது செய்வாரானால், நிச்சயம் அது உலக மக்களின் நிம்மதியைக் கெடுக்கும் ஒரு தலைவலியாக அமையக்கூடும்.

போர்ச்சூழல் இன்னமும் உக்கிரமாகிக்கொண்டே செல்வதை மறுப்பதற்கில்லை.இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், உக்ரைன் இன்னமும் நேட்டோ அமைப்பின் உறுப்பினர் இல்லை.

எனவே, நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இல்லாத ஒரு நாட்டுக்காக அந்த அமைப்பு இவ்வளவு பிரம்மாண்ட நடவடிக்கையை எடுக்க உள்ளது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக அமைந்துள்ளது.