இலங்கை ரூபிளை அங்கீகரித்தால் எரிபொருள் கிடைக்கும்!

0
324

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் உள்ளிட்ட பொருட்கள் பெறப்பட்டால் அதற்கான பணத்தை டொலரில் செலுத்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி ஜீ.வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஏனெனில் அதற்காக ரஷ்ய நாணயமான ரூபிளை இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயமாக மாற்றுவது போதுமானதாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதுக்குழுவினர் எரிபொருளை பெற்றுக்கொள்வது மட்டுமன்றி கோதுமை மா போன்ற உணவுகள் குறித்தும் கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேலும் உலகின் டொலர் வர்த்தகத்தை நிறுத்துவதில் ரஷ்யா முன்னிலை வகித்து வருவதாகவும், இலங்கையில் ரூபிளை அங்கீகரிக்கப்பட்ட நாணயமாக மாற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரூபிளை இலங்கை  அங்கீகரித்தால் எரிபொருள் கிடைக்கும்! | Fuel Available If Sri Lanka Recognizes Ruble