தென்னாப்பிரிக்காவில் 22 மாணவர்கள் மர்மமான முறையில் மரணம்

0
500

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் மர்மமான முறையில் 22 பாடசாலை மாணவர்கள் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (25-06-2022) இரவு இடம்பெற்றுள்ளது. 

கேளிக்கை விடுதியில் கூட்டநெரிசல் ஏற்பட்டு அவர்கள் இறந்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் உடல்களில் காயங்கள் எதுவும் இல்லாததால் உயிரிழப்பில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

இந்த நிலையில் கேளிக்கை விடுதியில் மர்மமாக இறந்து கிடந்த 22 பேரும் பாடசாலை மாணவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

விடுதியில் இறந்துகிடந்த 22 பாடசாலை மாணவர்கள்! நீடிக்கும் மர்மம் | 22 School Children Mysteriously Found Dead Hostel

அவர்கள் அனைவரும் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். தென்னாப்பிரிக்காவில் 18 வயது நிரம்பாதவர்கள் மது அருந்துவது சட்டப்படி குற்றமாகும்.

மாணவர்கள் 22 பேரும் உயர்நிலைப் பாடசாலை தேர்வுகள் முடிந்ததைக் கொண்டாடுவதற்காக கேளிக்கை விடுதிக்கு சென்றபோது அவர்களுக்கு இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

விடுதியில் இறந்துகிடந்த 22 பாடசாலை மாணவர்கள்! நீடிக்கும் மர்மம் | 22 School Children Mysteriously Found Dead Hostel

உடல்களில் காயங்கள் எதுவும் இல்லாத நிலையில் மாணவர்களுக்கு விஷம் வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவர்களின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க பிரதமர் சிரில் ரமபோசா இளம் வயதினருக்கு மது வழங்கி இருப்பது நிச்சயம் கண்டிக்கத்தக்கது என கூறினார்.

விடுதியில் இறந்துகிடந்த 22 பாடசாலை மாணவர்கள்! நீடிக்கும் மர்மம் | 22 School Children Mysteriously Found Dead Hostel