மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்படவுள்ள திறைசேரி பிணைமுறிகள்…

0
78

திறைசேரி பிணைமுறிகள் விற்பனை மூலம் அரசாங்க நிர்வாகத்துக்கான செலவுகளை ஈட்டிக்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை மறுநாள் மூன்று கட்டமாக திறைசேரி பிணைமுறிகள் மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது கட்ட திறைசேரிகள் எதிர்வரும் 2025ம்ஆண்டு ஜூன் மாதம் 01ம் திகதி முதிர்வடையும் திகதியைக் கொண்டிருக்கும்.

இந்த கட்ட பிணைமுறிகள் விற்பனை மூலம் அறுபதாயிரம் மில்லியன் ரூபா பணம் ஈட்டிக்கொள்ளப்பட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இரண்டாவது வகை பிணைமுறிகள் 2028ம் ஆண்டின் ஜனவரி மாதம் 15ம் திகதி முதிர்வடையும் காலத்தைக் கொண்டிருக்கும். அவ்வகை பிணை முறிகள் மூலம் 30 ஆயிரம் மில்லியன் ரூபாவைத் திரட்ட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதற்கும் மேலதிகமாக மற்றைய வகை பிணைமுறியின் முதிர்வடையும் காலம் 2031 மே மாதம் 15ம் திகதியாகும். இவ்வகை பிணைமுறி மூலம் 60 ஆயிரம் மில்லியன் ரூபாவைத் திரட்டிக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.