தாய்நாட்டுக்கு துரோகம் செய்த உக்ரைன் எம்.பி!

0
185

அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட உக்ரைனிய எம்.பி. ரஷ்யாவுக்காக வேலை செய்வதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரி டெர்காச் (Andriy Derkach) சம்பந்தப்பட்ட ரஷ்ய உளவு வலையமைப்பை கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் ஒரு ரஷ்ய முகவர் என்றும் அமெரிக்காவால் முன்னர் குற்றம் சாட்டப்பட்டது என்றும் உக்ரைனின் முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனமான ஸ்டேட் செக்யூரிட்டி சர்வீஸ் (SBU) தெரிவித்துள்ளது.

இப்போது ஆண்ட்ரி டெர்காச் (Andriy Derkach) எங்கு இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பிப்ரவரி 24ஆம் திகதி படையெடுப்பின் போது ரஷ்யப் பிரிவுகள் நகரங்களுக்குள் நுழைவதை எளிதாக்குவதற்கும் ஆதரவளிப்பதற்கும் அவற்றைப் பயன்படுத்த தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் வலையமைப்பை ஒரே அமைத்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

தாய் நாட்டிற்கு துரோகம் செய்த உக்ரைன் எம்.பி!

திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஆண்ட்ரி டெர்காச் (Andriy Derkach) பல மாதங்களுக்கு ஒவ்வொரு முறையும் 3 முதல் 4 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையைப் பெற்றதாக SBU கூறியுள்ளது.

ஏற்கெனவே அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஆண்ட்ரி டெர்காச் (Andriy Derkach) ஊழலை அம்பலப்படுத்தியதற்காக தான் குறிவைக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். இப்போது அவர் மீது மீண்டும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.