புலிகளின் சொத்துக்களை அபகரித்த ராஜபக்சேக்கள்! – மேர்வின் சில்வா

0
458

ராஜபக்சக்கள் (Rajapak’s) தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் ஒழித்து அவர்கள் வைத்திருந்த தங்க நகைகள், சொத்துக்களை களவாடி சேகரித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா (Mervyn Silva) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) கடந்த மே 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற மோதலின் பிரதானியாக செயற்பட்டவர்.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக எவ்வளவு எதிர்ப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தாலும் ஜனாதிபதி ஒருபோதும் பதவி விலகப் போவதில்லை.

புலிகளின் சொத்துக்களை திருடிய ராஜபக்ஷக்கள்! உண்மையை வெளிப்படுத்திய நபர்

எனவே, ஜனாதிபதி மாளிகையின் கதவுகளை உடைத்து, ஜனாதிபதியின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவேண்டும்.

நாடு இவ்வளவு மோசமாக உள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) எதற்காக இந்த பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டார் என்பது தெளிவாக புரியவில்லை.

மேலும் நாட்டில் ஒரு கப்புடாஸ் மாத்திரம் இருந்த நிலையில் தற்போது பல கப்புடாஸ் கூட்டங்கள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.