போர் பதற்றம் ஒருபுறம் இருந்தாலும் அமைதியாக சாதித்த புடின்!

0
378

உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும் உலகின் பல நாணயங்களின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்துள்ளன.

எனினும் ரஷ்ய ரூபிள்கள் மிகப்பெரிய அளவிற்கு வீழ்ச்சியடையவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை மீறி ரஷ்ய அரசாங்கம் ரூபிள் மதிப்பைக் குறைக்க அனுமதிக்கவில்லை என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தபோது அமெரிக்க டொலருக்கு எதிராக ரஷ்ய ரூபிள் 85 ஆக இருந்தது, ஆனால் கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு எதிராக ரஷ்ய ரூபிள் 53 ஆக இருந்தது.

இந்நிலையில் சர்வதேச ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ரஷ்ய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று கொள்கைகள் காரணமாக ரூபிளின் மதிப்பு காப்பற்றப்பட்டுள்ளது.

போர் பதற்றம் ஒருபுறம் இருந்தாலும் சத்தமில்லாது சாதித்த  புடின்!

அதில் ஒன்று, ரஷ்யாவில் வெளிநாட்டு நாணயத்தை வைத்திருக்க ரஷ்ய மத்திய வங்கி எடுத்த நடவடிக்கையாகும். இதன் மூலம், ரஷ்யாவில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனம் தங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ரூபிள்களாக மாற்ற வேண்டும். இது ரஷ்யாவில் டொலரை மீதப்படுத்துவதுடன் மற்றும் ரூபிளின் மதிப்பு சரியவிடாமல் காப்பாற்றப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, து கொள்கை ரூபிளில் எரிவாயு விற்பனை ஆகும். உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு, ரஷ்யா யூரோவை எரிவாயு விற்பனைக்கு பயன்படுத்தியது மற்றும் ரூபிள்களில் எரிவாயு விற்பனைக்கு பணம் செலுத்தும் கொள்கையை அறிமுகப்படுத்திய நிலையில் இது ரூபிளின் தேவையை அதிகரித்தது.

போர் பதற்றம் ஒருபுறம் இருந்தாலும் சத்தமில்லாது சாதித்த  புடின்!

மேலும் மூன்றாவது கொள்கை இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பதாகும். இதனால் நாட்டில் உள்ள டொலர் நாட்டிலேயே நீடிக்கும் எனவும் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.