சத்திரசிகிச்சை கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட பிரதேச செயலர்; ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

0
199

மாத்தறை பிரதேச செயலர் கௌசல்யா குமாரி சுகயீனம் காரணமாக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையின் ஊழியர்கள் சத்திரசிகிச்சை கூடத்தில் தடுத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமக்கு போதிய எரிபொருள் வழங்கப்படவில்லை எனக் கூறியபோது வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்திரசிகிச்சை கூடத்தில் சிக்கிய பிரதேச செயலர்; ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

இதன்போது சிகிச்சை பெற்று வந்த பிரதேச செயலரை சுமார் ஒரு மணித்தியாலம் சத்திரசிகிச்சை கூடத்தில் அடைத்து வைத்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து பொலிஸார் வருகை தந்து பிரதேச செயலரை மீட்டு வைத்தியசாலையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.

அதன்பின்னர் அவர் மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.