பதுளையில் திருட்டு பொருட்களுடன் கணவன் மனைவி கைது

0
192

பதுளை, பஹலவத்தயில் உள்ள வீடுகளில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டு பொருட்களுடன் கணவன் – மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

60 வயதுடைய கணவனும் அவரின் 57 வயதான மனைவியும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடுகளை உடைத்து திருடப்பட்ட பொருட்களான சமையல் எரிவாயு சிலிண்டர்கள், சமையல் எரிவாயு அடுப்புகள், மின்சார உபகரணங்கள், சங்கீத உபகரணங்கள், காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கணவன் மனைவியின் மிக மோசமான செயல்!

போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவரை குறித்த தம்பதியினர் பயன்படுத்தி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த இளைஞரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.