யாழ்.காங்கேசன்துறையில் 78 வயது பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை!

0
145

 யாழ்.காங்கேசன்துறை – கொல்லங்கலட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வாழ்ந்துவந்த வயோதிப பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்ட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த மூதாட்டி அணிந்திருந்த நகைகள் உள்ள நிலையில் கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை மூதாட்டியின் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்துக்கு தண்ணீர் இறைப்பதற்கு சென்ற உறவினர் ஒருவர் மூதாட்டி குருதிக் காயங்களுடன் சடலமாக காணப்பட்டதை அறிந்து காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவத்தில் சாணை தவமணி (வயது-78) என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்ட நிலையில் காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளன

யாழில் இன்று  காலை  பெண்ணொருவருக்கு நேர்ந்த பயங்கரம்