இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு யார் காரணம்?

0
177

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் நாட்டை மீடும் கட்டியெழுப்ப பல்வேறு நாடுகளிடமிருந்து கடன்களை பெற்று வருகின்றது.

இதேவேளை இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் தங்களின் பதவியை வைத்து பல மில்லயன் சொத்துக்களை குவித்துள்ளார்.

மேலும் இது குறித்து விரிவாக பார்க்காலம்…

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை தோன்ற திட்டமிடா நிதிக்கொள்கை, அரசியல் போட்டிகள், அரசின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள், குடும்ப ஆட்சியின் விளைவுகள் என பல்வேறு காரணங்கள் வழிவகுத்தது.

இந்த நிலைக்கு யார் காரணம்: கோடிகளை குவித்திருக்கும் அரசியால்வாதிகள்! முதலிடத்தில் யார்?

மேலும், இலங்கையானது நாளுக்கு நாள் ஒரு அபாயகரமான சூழலுக்குள் சென்றுகொண்டிருக்கின்றது.

அதேவேளை அதன் உச்சக்கட்டமாக நாட்டில் உணவுப் பஞ்ச நிலை தோன்றக் கூடிய அபாய நிலை உருவாகியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதைக்கு செல்வதற்கு யார் காரணம் எனும் போது ராஜபக்சக்களே என்பது பலரது பதிலாக அமைகின்றது.

இந்த நிலைக்கு யார் காரணம்: கோடிகளை குவித்திருக்கும் அரசியால்வாதிகள்! முதலிடத்தில் யார்?

இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷகளை விட பின்னால் வேறு சிலரும் காரணமாக அமைந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

தற்போதைய நிலையில் இலங்கை அரசியல் தொடர்பில் பலருக்கும் தெளிவற்ற தன்மையே காணப்படுகிறது.

இங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது சொத்துக்கள் மற்றும் அவர்களது அரசியற் காய்நகர்த்தல்கள் தொடர்பிலும் தெளிவற்றவர்களாக பெரும்பாலானோர் காணப்படுகின்றனர்.

இவ்வாறான நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்கள் 50சதவீதமே காரணம் மிகுதி மக்களே காரணம் என குறிப்பிடப்படுகிறது.

நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் தொடர்பிலும் அவர்களது அரசியற் செயற்பாடுகள் தொடர்பிலும் அவர்களது அரசியல் காய்நகர்த்தல்கள் தொடர்பிலும் ஆராயாது அவர்களது வீரப்பேச்சுக்களுக்கும் அவர்கள் வழங்கும் உறுதிமொழிகளையும் ஆராயாது தேர்தல் காலங்களில் அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக நியமித்தமையும் ஒரு காரணம்.

இந்த நிலைக்கு யார் காரணம்: கோடிகளை குவித்திருக்கும் அரசியால்வாதிகள்! முதலிடத்தில் யார்?

இவ்வாறாக அரசியல் தொடர்பிலும் அரசியல் வாதிகள் தொடர்பிலும் மக்கள் பூரணமான அறிவை கொண்டு விளங்கவேண்டியது அவசியமாகின்றது.

இந்த நிலையில் இலங்கையின் முதல் 10 அரசியல் வாதிகள் யார் என்பது தொடர்பில் ஏசியன் வேல்ட் வெளியிட்டுள்ள பெயர்ப்பட்டியலை விரிவாக பார்ப்போம்.

இந்த நிலைக்கு யார் காரணம்: கோடிகளை குவித்திருக்கும் அரசியால்வாதிகள்! முதலிடத்தில் யார்?

இதில்,

  • பத்தாம் இடத்தில் இருப்பவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க. இவரது சொத்து மதிப்பு எட்டு இலட்சத்து அறுபதணாயிரம் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாப் படி 31 கோடி ரூபாய்கள் ஆகும்.
  • ஒன்பதாவது இடத்தில் இருப்பவர் ஏ.எல்.எம் அதாவுல்லா. இவரது சொத்து மதிப்பு ஒன்பது இலட்சம் அமரிக்க டொலர்கள் ஆகும். இலங்கை ரூபாவில் 33கோடி ரூபா ஆகும்.
  • எட்டாவது இடத்தில் இருப்பவர் ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆவார். இவரது சொத்து மதிப்பு 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாவில் 46கோடி ரூபாக்கள் ஆகும்.
  • ஏழாவது இடத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆவார். இவரது சொத்து மதிப்பு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாவில் 50கோடி ரூபாக்கள் ஆகும்.
  • ஆறாவது இடத்தில் எச்.எம் பௌசி ஆவார். இவரது சொத்து மதிப்பு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாவில் 50கோடி ரூபாக்கள் ஆகும்.
  • ஐந்தாவது இடத்தில் இருப்பவர் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் . இவரது சொத்து மதிப்பு 1.7மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாவில் 61கோடி ரூபாக்கள் ஆகும்.
  • நான்காவது இடத்தில் இருப்பவர் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆவார் . இவரது சொத்து மதிப்பு 1.9மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாவில் 68கோடி ரூபாக்கள் ஆகும்.
  • மூன்றாவது இடத்தில் இருப்பவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார். இவரது சொத்து மதிப்பு 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாவில் 500கோடி ரூபாக்கள் ஆகும்.
  • இரண்டாம் இடத்தில் இருப்பவர் அர்சுண ரணதுங்க ஆவார் . இவரது சொத்து மதிப்பு 68 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாவில் 2400கோடி ரூபாக்கள் ஆகும்.
  • முதலாம் இடத்தில் இருப்பவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். இவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாவில் 06இலட்சம் கோடி ரூபாய்கள் ஆகும்.

இந்த தகவலை ஏசியன் வேல்ட் நிறுவனத்தின் பட்டியலிலே இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைக்கு யார் காரணம்: கோடிகளை குவித்திருக்கும் அரசியால்வாதிகள்! முதலிடத்தில் யார்?

இவ்வாறான நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சொத்துமதிப்பு தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்துவதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அயராது பாடுபடக்கூடியவர்களை சரியாக இனங்கண்டு அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கும் போதே இந்த நாடும் வளர்ச்சியடையும் நாட்டு மக்களின் பொருளாதாரமும் எழுச்சி அடையும் என்பது திண்ணம்!