ரஷ்யாவை குறிவைத்து தூக்கிய உக்ரைன்!

0
146

ரஷ்யாவின் கவச வாகனங்களை சரமாரியாக பீரங்கி தாக்குதல் நடத்தி உக்ரைன் அழித்துள்ளது. கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நிலையில் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தப் போரில் உக்ரைன் மட்டுமல்லாமல் ரஷ்யா மற்றும் உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. போரில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஈடு கொடுத்து உக்ரைனும் தாக்கி வருகிறது.

அந்த வகையில் ரஷ்யாவின் கவச வாகனங்களை குறி வைத்து உக்ரைன் துவம்சம் செய்துள்ளது. அதன்படி கார்கிவ் பிராந்தியத்தில் ரஷ்ய கவச வாகனங்கள் மீது மற்றொரு வெற்றிகரமான பீரங்கித் தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது.

ரஷ்யாவை குறிவைத்து தூக்கிய உக்ரைன்!

காடுகள் மற்றும் மரங்களில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த கவச வாகனங்களையே குறி வைத்து உக்ரைன் பீராங்கி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.