மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்து

0
177

பண்டாரகம – பாணந்துறை வீதியின் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (22-06-2022) பொல்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

கார் எதிர் திசையில் சென்று கொண்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த லொறி அருகில் எரிபொருள் வரிசைக்கு சென்ற வேன் ஒன்றின் மீது மோதியுள்ளது.

குறித்த காரை சட்டத்தரணி ஒருவர் செலுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் கார் மற்றும் வேன் பலத்த சேதமடைந்தாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி பயங்கர விபத்து!