இலங்கையின் அடுத்த ராஜபக்சர்கள் இவர்களா! வைரலாகும் புகைப்படம்

0
206

தென்னிலங்கையில் இடம் பெற்ற ஒரு திருமண வைபவமொன்றில் சில நண்பர்கள் சிவப்பு சால்வையுடன் புதுமணத் தம்பதிகளுக்கு ‘பால்மா, டீசல் என பெயரிட்டு அன்பளிப்பு வழங்கிய சுவாஸ்ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ராஜபக்ஷ குடும்பத்தினரால் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பெறுவதில் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

அவர்களினால் இலங்கை மக்களின் வாழ்க்கை அதள் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் ராஜபக்சர்களின் அடையாளமான சிவப்பு சால்வையுடன் சென்று இளைஞர்கள் சிலர் திருமணத்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலையை சுட்டிக்காட்டி புதுமணத் தம்பதிகளுக்கு ‘பால்மா, டீசல் என பெயரிட்டு அன்பளிப்பு வழங்கியுள்ள நிலையில்,  இலங்கையின் அடுத்த ராஜபக்சர்கள் இவர்களா என சமூகவலைத்தளங்களில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இலங்கையின்  அடுத்த ராஜபக்சர்கள் இவர்களா! வைரலாகும் புகைப்படம்