பிரான்ஸ் சென்ற பிரபல இந்திய நடிகர் அன்னு கபூரிடம் திருட்டு

0
161

பிரபல நடிகரும் தொலைக்காட்சிப் பிரபலமுமான இந்தியர் ஒருவர் தனக்கு பிரான்சில் மோசமான சம்பவம் ஒன்று நிகழ்ந்ததாகக் கூறி மக்களை எச்சரித்துள்ளார்.

அன்னு கபூர் புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்தவரும் அந்தாக்‌ஷரி என்னும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவரும் ஆவார்.

அவர் சமீபத்தில் பிரான்ஸ் சென்றிருந்த நிலையில் ரயிலில் பயணிக்கும்போது விலையுயர்ந்த பொருட்கள் வைத்திருந்த தனது பை திருட்டுப் போய்விட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக தனது பாஸ்போர்ட் மட்டும் தன்னிடம் இருப்பதாகவும் தான் பாரீஸ் பொலிசாரிடம் புகாரளிக்கச் செல்வதாகவும் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார் அன்னு கபூர்.

அத்துடன், பிரான்சுக்கு வருபவர்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளதுடன் பிரான்சில் ஏராளம் திருடர்கள் இருப்பதாகவும் பயணங்களின் போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மக்களை எச்சரித்துள்ளார்.