பிரிட்டிஷ் தீவே காணாமல் போய்விடும்; ரஷ்ய முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

0
118

மூன்றாம் உலகப்போரின் விளைவாக பிரித்தானியா காணாமலே போய்விடும் புதின் ஆதரவாளரான ஓய்வு பெற்ற ரஷ்ய ஜெனரல் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானிய இராணுவத்துக்கு புதிதாக தலைமைப் பொறுப்பேற்றுள்ள  Patrick Sanders, போரிடத் தயாராகுமாறு பிரித்தானிய படைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் சமீபத்தில் பிரித்தானிய இராணுவத்தின் தரைப்படைக்கு தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட Patrick Sanders, மூன்றாம் உலகப்போரில் ரஷ்யாவைத் தோற்கடிக்கவேண்டும் என பிரித்தானிய படைகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் Patrick Sandersக்கு பதிலடி கொடுத்துள்ள புடின் ஆதரவாளரும் ஓய்வு பெற்ற ரஷ்ய ஜெனரலுமான Evgeny Buzhinsky என்பவர், மூன்றாம் உலகப்போரின் விளைவாக பிரித்தானியா காணாமலே போய்விடும் என்பது Sandersக்கு புரியவில்லை என எச்சரித்துள்ளார்.

அத்துடன் போரில் பிரித்தானிய தீவே காணாமல் போய்விடும் என்றும் , அப்போது Sandersம் அவரது பின் சந்ததியாரும் எங்கே வாழ்வார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை என்றும் நக்கலாக Buzhinsky கூறியுள்ளார்.    

பிரித்தானிய தீவே காணாமல் போய்விடும்; எச்சரித்த முன்னாள் ரஷ்ய அதிகாரி!