15 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு மறுத்த டெஸ்லா ஊழியர்!

0
462

நீதிமன்றினால் உத்தரவிடப்பட்ட 15 மில்லியன் டொலர் நட்டஈட்டுத் தொகையை டெஸ்லா நிறுவன முன்னாள் பணியாளர் ஒருவர் நிராகரித்துள்ளார்.

இன ரீதியான முறையில் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்து தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பில் 15 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென நீதிமன்றம் டெஸ்லா நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

எனினும் இந்த நட்டஈட்டுத் தொகையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் நட்டஈட்டுத் தொகை போதுமானதல்ல எனவும் குறித்த பணியாளர் தெரிவித்துள்ளார்.

ஒவன் டயஸ் என்ற டெஸ்லா நிறுவனத்தின் கலிபோர்னிய உற்பத்திசாலையில் பணியாற்றிய போது இவ்வாறு இன ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

15 மில்லியன் டொலர் நட்டஈட்டை நிராகரித்த டெஸ்லா பணியாளர்!

இந்த குற்றச்சாட்டுக்களுக்காக 136.9 மில்லியன் டொலர் மொத்தமாக நட்டஈடாக வழங்கப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த்து.

எனினும், இந்த நட்ட ஈட்டுத் தொகையின் 90 வீதத்தை குறைத்து 15 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென நீதவான்கள் உத்தரவிட்டிருந்தனர்.

கறுப்பினத்தவர் என்ற காரணத்தினால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை என டயஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் டெஸ்லா நிறுவனம் அதிகாரபூர்வமாக இதுவரையில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.