சுவிட்சர்லாந்தில் வேலை செய்யும் செம்மறி ஆடுகள்!

0
510

சுவிட்சர்லாந்தின் நகரமொன்றில் செம்மறி ஆடுகள் சில பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் வலாயிஸ் கான்டனின் தலைநகரான ஸியோனில் இவ்வாறு நான்கு செம்மறி ஆடுகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அடா, பெல்லா, அதென்னா மற்றும் விக்டோரி (Ada, Bella, Athéna and Victoire ) ஆகிய நான்கு செம்மறி ஆடுகளை ஸியோன் நகர நிர்வாகம் பணியில் அமர்த்தியுள்ளது.

ஸியோன் மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த செம்மறி ஆடுகள் புல் வெட்டும் பணயில் அமர்த்தப்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

புல் வெட்டுவதற்காக பயிற்றப்பட்ட பணியாளர்களை கடமையில் அமர்த்துவதனை விடவும் செம்மறி ஆடுகளை பணியில் அமர்த்துவது சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு புறத்தில் ஆடுகள் உணவாக புற்களை உண்ணும் அதேவேளை மறுபுறத்தில் வளர்ந்த புற்கள் வெட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.