துனீஷியாவில் இஸ்லாம் அரச மதம் என்ற அந்தஸ்த்து நீக்கம்

0
163

துனீஷியாவில் வரும் ஜூலை 25 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவிருக்கும் புதிய அரசியலமைப்பு வரைவில் அரசின் மதம் என்ற இஸ்லாத்துக்கான அந்தஸ்த்து நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி கையிஸ் செயித் (Kais Saied) தெரிவித்துள்ளார்.

துனீஷிய அரசியல் முறையில் சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் அவரது முயற்சியின் ஓர் அங்கமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

‘துனீஷியாவின் அடுத்த அரசியலமைப்பில் இஸ்லாம் அரசின் மதம் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் உம்மாவின் (சமூகம்) மதமாக இஸ்லாம் இருக்கும் என்று அவர் (Kais Saied)குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் ‘உம்மா மற்றும் அரசு இரு வெவ்வேறு விடயங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். கையிஸ் செயித் (Kais Saied) துனீஷிய அரசை நீக்கி ஆணைகள் மூலம் ஆட்சி நடத்தி வரும் நிலையில் அரசை மாற்றி அமைக்கும் முக்கிய படியாகவே புதிய அரசியலமைப்பு வரைவை கொண்டுவந்துள்ளார்.

துனீஷியாவின் 2014 மற்றும் 1959 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் இஸ்லாம் அரசின் மதம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை துனீஷிய மக்கள் தொகையில் 99 வீதம் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாத்துக்கான அந்தஸ்த்தை நீக்கிய முக்கிய நாடு!