கந்தானை எரிபொருள் நிலையத்தில் ஹெல்மெட்டுக்கு தீ மூட்டி வீசிய நபர்

0
209

கந்தானையில் அமைந்துள்ள கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவர் தலைக்கவசத்திற்கு தீ மூட்டி அதனை எரிபொருள் நிலையத்தை நோக்கி வீசிய சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.

குறித்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்திய நிலையில் , அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளும், எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களும் விரைந்து செயற்பட்டு தலைக்கவசத்தில் இருந்த தீயை அணைத்தனர்.

இதனால், அங்கு ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அதேவேளை , சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்காக பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.