பிரதமருடன் யோகா நிகழ்வில் கலந்து கொண்ட சுமந்திரன்

0
129

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் யோகா நிகழ்வு ஒன்றை நேற்றையதினம் (21-06-2022) ஏற்பாடு செய்திருந்தது.

இந்த சர்வதேச யோகா தின நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wikcremesinghe) உள்ளிட்ட அரச தரப்பு மற்றும் எதிர் தரப்பினரும் குறித்த கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனின் செயலால் பரபரப்பாகும் இலங்கை அரசியல் களம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சுமந்திரன் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் இன்றைய நிகழ்வில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.