அதிபர் புடினுடன் ஜனாதிபதி நேரடியாக பேசினால் நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கும்!

0
161

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் (Vladimir Putin) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) நேரடியாக உரையாடினால் அங்கிருந்து நாட்டிற்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும் என்று விமல் வீரவங்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (21-06-2022) இலங்​கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெடரி உடன் விமல் வீரவங்க தலைமையிலான சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் 11 கட்சிகளின் கூட்டமைப்பு சந்திப்பொன்றை நடத்தியிருந்தது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட விமல் வீரவங்ச இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் பெற்றுக்கொள்வதாயின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச முதலில் நேரடியாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நேரடியாக பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பலம் வாய்ந்த குழுவொன்றை புடினுடன் நேரடி பேச்சு வார்த்தைக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று ரஷ்ய தூதுவர் தெரிவித்தார்.

ஏரோப்ளொட் விமான சம்பவம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ள போதும் புடினுடன் நேரடித் தொலைபேசி உரையாடல் மூலம் அதனைத் தீர்த்துக்கொள்ளும் சாத்தியம் இருப்பதாகவும் விமல் வீரவங்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் நேரடியாக பேசினால் நாட்டிற்கு எரிபொருள் கிடைக்கும்!