தமிழர்களின் கொலைகளுக்கு பொறுப்பானவர் சரத் வீரசேகரவே என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

தமிழர்களுக்கு ஒரு நீதியும் சிங்களவர்களுக்கு ஒரு நீதியும் இன்றும் நடந்துகொண்டிருக்கிறதாகவும் அவர் கூறினார்.
முல்லைத்தீவில் எரிபொருள் பெற வரிசையில் நின்ற தமிழ் இளைஞர்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவத்தினரின் அராஜகத்தால் தாக்கப்பட்ட இளைஞர்கள் மருத்துவமனையில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.