நான்கு ஆண்டுகளில் 5வது முறையாக இஸ்ரேலில் தேர்தல்!

0
121

இஸ்ரேலில் பிரதமர் நப்தாலி பென்னட் (Naphtali Bennett) தலைமையிலான அரசு கவிழ உள்ள நிலையில் அங்கு 5-வது முறையாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

அடுத்த வாரம் ஆட்சியை கலைப்பதற்கான மசோதா தாக்கல் செய்ய உள்ளதாகவும் மசோதா வெற்றி பெற்றால் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரை காபந்து அரசின் பொறுப்பாளராக வெளியுறவு அமைச்சராக உள்ள யாயர் லாபிட் (Yair Lapid) தலைமை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கடந்த நான்கு ஆண்டுகளில் 5-வது முறையாக இஸ்ரேலில் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.