ரஷ்யாவில் எஜமானியை தாக்கி உண்ட பூனைகள்!

0
518

ரஷ்யாவின் bataysk என்ற பகுதியில் தான் வளர்த்த பூனைகளாலேயே கொடூரமாக தாக்கப்பட்டு பெண் ஒருவர் கோரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் உள்ள வீட்டிலிருந்து உயிரிழந்த பெண்ணின் அழுகிய உடலை பொலிசார் மீட்டுள்ளனர். இறந்த பெண்ணுடன் உடன் பணிபுரிந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரிக்கச் சென்றபோதுதான் அவர் வளர்த்த சுமார் 20 பூனைகளே அவரை கொன்று தின்றுள்ளமை தெரியவந்துள்ளது.

நாடொன்றில் பயங்கரம்!  எஜமானியையே உணவாக்கிய பூனைகள்

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தனது வீட்டில் அப்பெண்ணின் சடலம் பூனைகள் சூழ இருந்திருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாது தனது உரிமையாளரை கடித்துக் கொன்ற பூனைகள் அவர் இறந்த பிறகும் விடாமல் அவரது உடல்பாகங்களை தின்றதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பேசியுள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் “இரண்டு வாரங்களாக அந்த பூனைகளுக்கு அதன் உரிமையாளர் எந்த உணவும் கொடுக்காமல் வெளியே சென்றிருக்கிறார். பசியின் வெறியோடு இருந்த அந்த பூனைகள் அப்பெண்ணையே உணவாக மாற்றியிருக்கின்றன” எனக் கூறியிருக்கிறார்கள்.

நாடொன்றில் பயங்கரம்!  எஜமானியையே உணவாக்கிய பூனைகள்

பிரமாண்டமாக புசுபுசுவென இருக்கும் இந்த Maine Coon வகை பூனைகள் உள்நாட்டிலேயே வளர்க்கப்படக் கூடியவையே. இது அமெரிக்காவின் Maine-ல் தோன்றியதாம். ரஷ்யாவில் நடந்தது போன்று கிழக்கு லண்டனில் உள்ள Hampshire நகரிலும் Janet Veal பெண் ஒருவர் வளர்க்கப்பட்ட பூனைகளால் பாதி உண்ணப்பட்டு இரண்டு மாதங்களாக கண்டுபிடிக்க முடியாமல் இருந்தார்.

அதன் பிறகு ஜெனெட்டின் உடல் அவரது வீட்டின் கிச்சனில் அழுகிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவருடன் கூட உயிரோடும் பிணமாகவும் இருந்த சில பூனைகள் மீட்கப்பட்டமை பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நாடொன்றில் பயங்கரம்!  எஜமானியையே உணவாக்கிய பூனைகள்

இந்நிலையில் செல்லப்பிராணிகளை வளர்ப்போர் அதற்கான கால்நடை மருத்துவர்களை அணுகி தகுந்த அறிவுரைகளை பெற்று செயல்பட வேண்டும் என லங்குகள் நல ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.