8 மணி நேரத்தில் 8 பேர் துப்பாக்கிச் சூடு: டொராண்டோ மேயர் கண்டனம்

0
399

ரொறன்ரோவில் எட்டு மணித்தியாலங்களில் 8 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவங்கள் தொடர்பில் ரொறன்ரோ மேயர் ஜோன் டோரி கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பங்களில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி வன்முறைகள் கடுமையான வருத்தத்தை அளிப்பதாக மேயர் தெரிவித்துள்ளார்.

நகரில் இடம்பெறக்கூடிய எந்தவொரு ஆயுத வன்முறைக் கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வார இறுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பெரும் வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நகரில் இடம்பெற்று வரும் துப்பாக்கிச் வன்முறைகளை தடுக்க பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கனடாவிற்குள் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகள் கொண்டு வரப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தந்தையர் தினத்தில் இடம்பெற்ற துப்பாக்கி வன்முறைச் சம்பவங்கள் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் அது குறித்து பொலிஸாரிடம் அறிவிக்குமாறு மேயர் ஜோன் டோரி கோரியுள்ளார்.