உக்ரைனில் குழந்தைகளுக்காக நோபல் பரிசை விற்கும் ரஷ்ய பத்திரிகையாளர்

0
400

உக்ரைன் சிறுவர்களுக்காக ரஸ்ய ஊடகவியலாளர் ஒருவர் நோபள் சமாதான பரிசினை விற்பனை செய்யும் உருக்கமான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

ரஸ்ய ஊடகவியலாளர் டிமிட்ரி முராடோவ் (Dmitry Muratov) என்பவரே இவ்வாறு உக்ரைன் சிறார்களுக்காக பரிசினை ஏலத்தில் விற்பனை செய்கின்றார்.

இந்த பரிசு விற்பனை மூலம் கிடைக்கப் பெறும் பணம் முழுவதும் போர் காரணமாக பாதிக்கப்பட்ட உக்ரைன் சிறார்களின் நலனுக்காக செலவிடப்பட உள்ளது.

இந்த ஏல விற்பனை பணம் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திற்கு கிடைக்கப் பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2021ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முராடோவிற்கு (Dmitry Muratov)  தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் சிறார்கள் குறித்து விசேட கரிசனை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யா மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் மனிதாபிமான உதவிகள் கூட வழங்கப்படக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரஸ்யாவின் முராடோவ்  (Dmitry Muratov) மற்றும் பிலிப்பைன்ஸின் மாரியா ரிசா ஆகியோருக்கு நோபாள் சமாதான விருது வழங்கப்பட்டது.

உக்ரைன் சிறுவர்களுக்காக ரஸ்ய ஊடகவியலாளரின் உருக்கமான செயல்

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்த காரணத்தினால் இவ்வாறு பரிசு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முராடோவின்  (Dmitry Muratov) நோபாள் தங்கப் பதக்கம் 175 கிராம் எடையுடைய 23 கரட் தங்கத்திலானது என்பதுடன் சுமார் 10000 அமெரிக்க டொலர் பெறுமதியானதாகும். இந்த பதக்கத்தை ஏலத்தின் விடுவதன் மூலம் 5 லட்சம் டொலர்களையேனும் பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.