தனியார் பஸ் சேவைகள் நாளை வழமைக்குத் திரும்பும்

0
47
cof

அகில இலங்கை தனியார் பஸ் சேவைகள் நாளையதினம் வழமைக்கு திரும்பும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) நேற்று தெரிவித்துள்ளது.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரின் தீர்மானத்தை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து LPBOA தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவிக்கையில்,

தனியார் பஸ்சேவைகள் விடுத்த மகிழ்ச்சியான தகவல்

தனியார் பஸ்களுக்கு 600,000 லீற்றர் உட்பட இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) 800,000 லீற்றர் டீசல் வழங்குவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதியளித்துள்ளார்.

தனியார் பஸ்சேவைகள் விடுத்த மகிழ்ச்சியான தகவல்

எனவே, மக்கள் தனியார் பஸ் சேவைகளை பயன்படுத்த முடியும் என தெரிவித்த அவர் மேலும் கொழும்பு மக்களுக்காக குளிரூட்டப்பட்ட புதிய பஸ் சேவை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

அத்துடன் போக்குவத்தில் மக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாது எனவும் விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.